Home யாழ் செய்தி யாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு

யாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு

யாழ் செய்திகள்:யாழ். கொழும்புத்துறை கடற்கரை பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்த கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது.

அதில் 4.125 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், கைப்பற்றப்பட்ட பொதி யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.