ஹர்த்தால் மற்றும் பேரணிக்கு வவுனியா மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவு

வவுனியா செய்திகள்:வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் தமது உறவுகளுக்கு நீதி கோரி திங்கட்கிழமை நடாத்தப்படவுள்ள பூரண ஹர்த்தால் மற்றும் பேரணிக்கு வவுனியா மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக தமது உறுவுகளைத் தேடி வீதிகளில் போராட்டம் நடாத்திவரும் உறவுகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அம் மக்களையும் சர்வதேசத்தையும் அரசானது தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது.

எனவே இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு கேட்டு கொள்வதோடு இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அனைவரையும் ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

Advertisement