Home வவுனியா செய்திகள் வவுனியாவைச் சேர்ந்த முகாமையாளர் ஒருவர் கிளிநொச்சியில் வீடொன்றில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்

வவுனியாவைச் சேர்ந்த முகாமையாளர் ஒருவர் கிளிநொச்சியில் வீடொன்றில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்

வவுனியா செய்திகள்:வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கிளிநொச்சியில் வீடொன்றில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி உதயநகரில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (வயது-32) என்ற நபரே கொலை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் வந்த பின்னரே முழுமையான தகவல்களைப் பெறமுடியும் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், தனது மனவியுடன் தொடர்பை வைத்திருந்தார் என்ற குறிப்பிட்டு அந்த நபரை வெட்டியுள்ளார்.

வெட்டுக்காயத்துக்குள்ளான நபர் மு.ப. 9 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று மு.ப. 10 மணிக்கு மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

கொலை செய்யப்பட்டவர்.

காப்புறுதி முகாமையாளர் எனவும் பல பெண்களுடன் தொடர்புவைத்திருப்பர் எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.