Home நிகழ்வுகள் இலங்கையில் 25 வருடங்கள் யாசகம் பெற்று அதன்மூலம் கோடிஷ்வரராக மாறிய நபர் கைது

இலங்கையில் 25 வருடங்கள் யாசகம் பெற்று அதன்மூலம் கோடிஷ்வரராக மாறிய நபர் கைது

நிகழ்வுகள்:இலங்கையில் 25 வருடங்கள் யாசகம் பெற்று அதன்மூலம் கோடிஷ்வரராக மாறிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

65 வயதான பார்வையற்ற நபர் ஒருவரையே ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் யாசகம் பெற்ற பணத்தில் 3 வீடுகளை சொந்தமாக வாங்கியுள்ளார். வங்கியில் ஐந்து இலட்சம் ரூபாவை சேமிப்பாக வைத்துள்ளார்.

தனது இரண்டு வீட்டினை இரண்டு மகளுக்கு சீதனமாக வழங்கியுள்ளார். இன்னுமொரு வீட்டினை வாடகைக்கு விடுவதற்காக நிர்மாணித்துள்ளார்.

குறித்த நபர் கம்பஹா – கொழும்பு கோட்டைக்கு இடையில் பயணிக்கும் ரயிலில் யாசகம் செய்து வருகின்றார்.

கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவரது கையில் 4000 ரூபாய் பணம் காணப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் குறித்த நபரின் மனைவி உயிரிந்துள்ளார். அன்று முதல் அவர் ரயில் மற்றும் பேருந்துகளில் யாசகம் பெற்று வந்துள்ளார்.

அவரது இரண்டு மகள்களும் திருமணம் செய்துள்ளனர். அவர்களது கணவன்மார் நல்ல தொழில் செய்து வருகின்றனர். மகள்கள் இருவருக்கும் கார்கள் உள்ளன.

யாசகம் மூலம் மாதம் 150000 ரூபாய் பணம் சம்பாதிப்பதாகவும், கண்கள் தெரியாமல் போனமையனால் அது தனக்கு நன்மையாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் தூய்மையாக ஆடை அணியும் இந்த நபர் ரயிலில் யாசம் எடுக்கும் விடயம் இரண்டு மகள்களுக்கும் தெரியும். தான் யாசகம் பெற முச்சக்கர வண்டியிலேயே சென்று வருவதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

தனது தந்தை பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதனை அறிந்த மகள் கோட்டை பாதுகாப்பு தலைமையத்திற்கு தனது சொகுசு மோட்டார் காரில் சென்றுள்ளார்.

யாசகம் மூலம் கோடிஷ்வரரான நபர் தொடர்பான தகவலை கேட்டு நாட்டு மக்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.