Home கனேடிய செய்திகள் எத்தியோப்பிய விமான விபத்து 18 கனேடியர்கள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

எத்தியோப்பிய விமான விபத்து 18 கனேடியர்கள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

கனடா செய்திகள்:எத்தியோப்பிய விமான விபத்தில் 18 கனேடியர்கள் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விபத்தில் உயிரிழந்த எட்மன்டன் பகுதியினைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து சிதறியது.இதில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் உயிரிந்தனர்.

விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.குறித்த விமானத்தில் பயணித்த 18 கனேடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, எட்மன்டன் பகுதியினைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Amina Ibrahim Odowaa என்ற தாயும் ஐந்து வயதான அவரது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Amina Ibrahim Odowaa இன் சகோதரர் Mohamed Hassan Ali அந்நாட்டு ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் 18 கனேடியர்கள் உயிரிழந்தனர்.

அதில் ரொறன்ரோவைச் சேர்ந்த ஒரு இளம் வின்னிபெக் ஆர்வலருமான 24 வயதான டேனியல் மோர் என்பவர் உயிரிழந்துள்ளதாக கனடாவின் உத்தியோகப்பூர்வ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எத்தியோப்பிய விமானம் தனது பயணத்தை ஆரம்பித்த 6ஆவது நிமிடத்தில் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் (35 நாடுகளைச் சேர்ந்தவர்கள்) உயிரிந்தனர்.

அதில் ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களும் அடங்குவதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 24 வயதான டேனியல் மோர் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு செய்வதற்கு தயாரானார்.

இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதி குறித்த பெண் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில், “கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் சட்டமன்றதில் கலந்துகொள்ளும் முகமாக கனடாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கத்துடன் நானும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்,

தற்போது கனடாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கத்துடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு செல்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்” என பதிவிட்டுள்ளார்.