கல்லூரி மாணவியை உறவினரே கொன்ற கொடூரம்.. கொன்றது ஏன்..? பரபரப்பு வாக்குமூலம்

இந்திய செய்திகள்:கோவை கல்லூரி மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த உறவினரே கொடூரமான முறையில் மாணவியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரகதி. இவர் கோவை ராமகிருஷ்ணா கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு விடுதியில் இருந்து பிரகதி புறப்பட்டு சென்றுள்ளார்.

இவரை நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் அரை நிர்வாண நிலையில் பிரகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து கல்லூரியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் சதீஷ் என்ற இளைஞருக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ், பிரகதிக்கு உறவினராவார்.

Advertisement

ஏற்கெனவே திருமணமான சதீஷ், பிரகதியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை பிரகதி ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதனிடையே பிரகதிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது.

இதையறிந்த சதீஷ், பிரகதி மேல் இருந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதை இவர் மட்டுமே செய்திருக்க முடியாது என்பதால் இந்த கொலைக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்