கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு

சமூக சீர்கேடு:கொழும்பின் புறநகர் பகுதியான பியகம பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

இதன்போது அங்கு பணியாற்றிய 7 பெண்கள் மற்றும் 3 முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு விபச்சார விடுதிகளிலும் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

ருவன்வெல்ல, நுகேகொடை, மாத்தறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 26 – 40 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பியகம பிரதேசத்தில் தொழில் செய்ய செல்வதாக வீட்டில் கூறி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் முகாமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.