Home சுவிஸ்லாந்து செய்திகள் சுவிஸில் களைகட்டப்போகும் தமிழர்களின் தவக்கால திரு யாத்திரை!

சுவிஸில் களைகட்டப்போகும் தமிழர்களின் தவக்கால திரு யாத்திரை!

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழியில் பிரசித்திப்பெற்ற அயின்சீல்டன் திருத்தலத்தில் தவக்கால திரு யாத்திரை மிகவும் பக்திப்பூர்வமாக நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இயேசுக்கிறிஸ்துவின் திருப்பாடுகளை அனுஸ்டிக்கும் வகையில் சிலுவைப்பாதை, ஒப்புரவு(பாவமன்னிப்பு), திருப்பலி என்பன நாளைய தினம் இடம்பெறவுள்ளன.

இதன்போது, தமிழ் மொழியின் மூலம் ஏழு தமிழ் அருட்தந்தையர்களும், ஜேர்மன் மொழியின் மூலம் இரண்டு அருட்தந்தையர்களும் திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

அயின்சீல்டன் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து மதியம் 12.00 மணியளவில் சிலுவைப் பாதை திருயாத்திரை ஆரம்பமாகி பின்னர் ஆலயத்திற்கு சென்றதும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படவுள்ளது.

அதன் பிறகு அனைத்து அருட்தந்தையர்களாலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

மேலும், இதன் போது 2019 தொடக்கம் 2020ஆம் ஆண்டிற்கான சுவிஸ் தமிழ்க்கத்தோலிக்க அருட்பணிப் பேரவையின் பணியாளர்கள் பணிப்பொறுப்பு ஏற்கவுள்ளனர்.

இவர்களின் பணிப்பொறுப்பு மூன்று வருடத்திற்கு மட்டும் என்பது குறிப்பிடத் தக்கது