Home உள்ளூர் செய்தி தாய் முதலை தாக்கி மரணிப்பதை கண்முன்னே கண்ட மகன் – மட்டக்களப்பு பகுதியில் நடந்த கொடூரம்

தாய் முதலை தாக்கி மரணிப்பதை கண்முன்னே கண்ட மகன் – மட்டக்களப்பு பகுதியில் நடந்த கொடூரம்

மட்டக்களப்பில் கடந்த வாரம் ஏழு பிள்கைளின் தாயார் முதலை தாக்கியதில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பான மரண விசாரனை நேற்று இடம்பெற்றிருந்தது.

இதில் குறித்த தாயாரின் மகன் சாட்சியளித்திருந்தார். அவர் தெரிவித்ததாவது,

“அம்மாவை முதலை பிடித்து விட்டதாக எனது அண்ணா தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கூறினார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சுமார் 15 மீற்றர் தூரத்தில் எனது அம்மா மேலே வந்து வந்து நீருக்குள் சென்றதை பார்த்தேன்.

பின்னர் 5, 6 தோணிகளில் தேடுதலை மேற்கொண்டோம்.

அப்போது முதலை எனது அம்மாவை விடாப்பிடியாக பிடித்திருந்தது.

தொடர்ந்து குறித்த முதலையிடம் போராடி எனது அம்மாவை காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.

எனினும் எனது அம்மா இறந்து விட்டதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலே இந்த மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்”