Home பல்சுவை உங்களது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா?

உங்களது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா?

பொதுவாக வாழ்க்கையில் பிரச்சினை இல்லாதாவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்

கண் திருஷ்டி, பணப்பிரச்சினை, தொழில் நஷ்டம், திடீர் நோய் வாய்ப்படுதல் போன்ற பிரச்சினைகளில் நாம் அடிக்கடி அவதிப்படுவதுண்டு.

இதிலிருந்து விடுபட நமர் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த கருப்பு மஞ்சள் பெரிதும் உதவி புரிகின்றது.

இது நமது வாழ்வில் நடக்கும் பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு தருகின்றது.

கருமஞ்சள் இலைகளின் அடுக்குகளில் வசீகரமாகக் காணப்படும் சிவந்த மலர்களால், இச்செடிகள், சில இடங்களில் அழகுக்காக வளர்க்கப்படுவதாகும்.

கருப்பு மஞ்சள் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் பல பிரச்னைகளை சரி செய்து உங்கள் வாழ்கையையே மாற்றக்கூடிய சக்தி இதற்கு உள்ளது.

அந்தவகையில் கருப்பு மஞ்சள் உங்களை எந்தெந்த பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றும் என்று இங்கு பார்க்கலாம்.

  • வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை தீர ஒரு சுபதினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு கிழக்கு திசை பார்த்து அமரந்து நீங்கள் வாங்கி வந்த கருப்பு மஞ்சள் மணியை கையில் வைத்து வேண்டுதலை தொடங்கவும். தொடர்ந்து உங்கள் வேண்டுதலிலும் கருப்பு மஞ்சளை உருட்டுவதிலும் கவனம் செலுத்தி 108 முறை முடிந்தபின் சூரியபகவானை வழிபடவும்.
  • 9 கருப்பு மஞ்சள் மணிகளை கொண்டு காப்பு செய்து அதனை உங்களை கையில் போட்டுக்கொள்ளுங்கள். இது உங்களை தீயசக்திகள் நெருங்காமல் பாதுகாப்பதுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும். மேலும் இதன்மூலம் உங்களை செல்வம் வந்து சேரும்.
  • முக்கியமான நேர்முக தேர்விற்கோ அல்லது முக்கியமான வேலைக்கோ செல்லும்போது கருப்பு மஞ்சள் திலகத்தை நெற்றியில் வைத்து செல்லுங்கள். இது உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.
  • உங்கள் குழந்தைக்கோ அல்லது வீட்டில் உள்ள யாராவது கண் திருஷ்டியால் கருப்பு மஞ்சளை ஒரு துணியில் சுற்றி அதனை கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு ஏழு முறை சுத்திப்போடவும். இது கண்டதிருஷ்டியால் ஏற்படும் பாதிப்பை உடனடியாக குறைக்கும்.
  • உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கொஞ்சம் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு அதனை இரண்டு உருண்டைகளாக உருட்டவும். அதனுடன் வெல்லம் மற்றும் கருப்பு மஞ்சள் சேர்த்து பாதிக்கப்பட்டவருக்கு 7 முறை சுற்றவும். பின்னர் இதை பசுமாட்டிற்கு சாப்பிட கொடுக்கவும். இவ்வாறு செய்தால் விரைவில் நோய்வாய்பட்டவர் குணமடைவார்.
  • பணப்பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் கருப்பு மஞ்சளையும், குங்குமத்தையும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லக்ஷ்மி தேவிக்கு வைத்து வழிபடவும். அதன்பின்னர் அதனை உங்கள் லாக்கரில் வைக்கவும். அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீரும்.
  • தொழிலில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தால் ஒரு மஞ்சள் துணியில் சிறிது கருப்பு மஞ்சளை எடுத்துக்கொண்டு அதனுடன் 11 கோமதி சக்கரங்கள் மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை சேர்த்து ” ஓம் வாசுதேவயா நமஹ ” என்னும் மந்திரத்தை கூறி நீங்கள் வேலை செய்யும் இடத்தில் வைக்கவும். விரைவில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
  • கருப்பு மஞ்சள் விதைகளை உங்கள் வீட்டின் முகப்பில் ஒரு துணியில் கட்டி தொங்கவிடுவதனால் இது எந்த தீயசக்தியும் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ளும் அதேசமயம் உங்கள் வீட்டின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
  • கருப்பு மஞ்சள் மாந்திரீகம் தொடர்பான காரிங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மஞ்சள் வைத்து வழிபடும்போது காளி நமது வேண்டுதலை எளிதில் நிறைவேற்றி விடுவார்.