யாழ் நகரில் சுதந்திரமாக பகலிலே களவில் ஈடுபடும் சைக்கிள் திருடர்கள் – பொதுமக்களே அவதானமாக இருக்கவும்

யாழ்ப்பாண நகரப் பகுதியில் சமீப காலமாக திருட்டுகள் அதிகரித்து வருவதாக அந்தப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண இராசாவின் தோட்டம் யாழ்.போதனா வைத்தியசாலை வீதி வரையான பிரதேசத்தில் சமீபகாலமாக திருட்டுகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்தப் பிரதேசத்தில் அருகருகே உள்ள வீடுகளில் பகல் வேளைகளில் 3 துவிச்சக்கரவண்டிகள் திருடப்பட்டுள்ளன. மேலும் இந்த வீதியால் வந்தவரை அடித்து மிரட்டி அவரிடம் இருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.இப்படியாக இந்தப் பகுதியில் திருட்டுகள் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

Advertisement

பகலிலேயே வீட்டுக்குள் இறங்கி திருடப்படுவதால் நிம்மதியாக வீட்டைவிட்டு வெளியே போகமுடியவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.பொலிசில் முறைப்பாடு செய்தும் இதுவரை ஒரு திருடனும் அகப்படாத நிலையில், திருட்டுகள் இடம்பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.