Home சர்வதேச செய்தி மகள்களின் காதலர்களுக்கு போதை மருந்து குடுத்து உறவு கொண்ட தாய் – கலிபோர்னியாவில் நடந்த மோசமான...

மகள்களின் காதலர்களுக்கு போதை மருந்து குடுத்து உறவு கொண்ட தாய் – கலிபோர்னியாவில் நடந்த மோசமான சம்பவம்

தனது இரண்டு மகள்களின் ஆண் நண்பர்களுக்கும் மதுபானமும் புகையிலையும் கொடுத்து மயக்கி அவர்களுடன் உறவு வைத்துக் கொண்ட பெண்ணின் கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த Coral Lytle (41) தனது மகள்களின் ஆண் நண்பர்களான 14 மற்றும் 15 வயதுடைய பையன்களுடன் தவறான உறவு வைத்துக் கொள்வதற்காக தினமும் 15 மைல் பயணம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த பையன்களில் ஒருவன், தன்னிடம் Coralஇன் கணவர் கை குலுக்கும்போது குற்ற உணர்வு ஏற்பட்டதையடுத்து Coralஉடனான தவறான உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தெரிவித்துள்ளான்.

முதலில் Coral மீது 21 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததோடு, நீண்ட சிறைத்தண்டனையும் வழங்கப்படுவதாக இருந்தது.

ஆனால் ஒரு நீதிபதி அந்த தண்டனை சரியானதாக இல்லை என்று கூறி அதை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையில், Coral கைது செய்யப்பட்டதும் அவரது கணவர் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.

மேலும்