யாழ் குருநகர் பகுதியில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது?

குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில், வெளி வளாகத்திலிருந்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

எனினும் டைனமைட் என்ற வெடிபொருள்களாக இருந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் அதனை யாரும் பொருட்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அது குண்டுவெடிப்பாக இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில், அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விரைந்து மேலதிக விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.