யாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை!

யாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பெற்றுச்சென்றுள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச செலயகத்தில் ஒரு முஸ்லிம் குடும்பமே பதிவுகளை மேற்கொண்டுள்ளது.

எனினும் அப்பகுதியில் பல முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றனர்.

Advertisement

இந்த நிலையிலேயே பருத்தித்துறை பள்ளிவாசலுக்குச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களின் விபரங்களை மௌலவியிடம் கேட்டுள்ளனர்.

அதனடிப்படையில் நேற்று குறித்த விபரங்களை மௌலவி வழங்கியுள்ளார்.

பருத்தித்துறை பிரதேசசபைக்குட்பட்ட பல பகுதிகளில் முஸ்லிம்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.