குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது!

கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். நாவாந்துறை ஐந்து சந்திப் பகுதியில் வைத்து இன்று காலை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.