யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தேவையற்ற பொதிகளை எடுத்து வர வேண்டாம் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் , வைத்தியர்கள் , தாதியர்கள், பணியாளர்கள் , நோயாளிகளை பார்வையிட வருவோர் உள்ளிட்ட அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

அதனால் வைத்தியசாலைக்குள் வருவோரை சோதனையின் பின்னரே உள்நுழைய அனுமதிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

Advertisement

அதனால் அவர்கள் தம்முடன் எடுத்து வரும் பொதிகளையும் சோதனையிட்டு அனுமதிக்க வேண்டி உள்ளமையால் வீண் கால தாமதம் ஏற்படுகின்றது.

எனவே நாட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தம்முடன் தேவையற்ற பொதிகளை எடுத்து வருவதனை தவிர்ப்பதன் மூலம் வீண் சிரமங்களை தடுக்க முடியும் என தெரிவித்தார்.