அம்பாறை பிரதேசத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய மூவர் – 2 பேர் கைது ஒருவர் தப்பியோட்டம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் தனியாக வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை மூன்று ஆண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்துவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.

இதன்போது இரு சந்தேக நபர்களை கைது செய்ததுடன் ஒருவர் துவிச்சக்கரவண்டியை விட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் குறித்த நபரை பொலிசார் தேடிவருவதாகவும் பெரும் குற்றப் பொறுப்பதிகாரி எஸ்.எம் சதாத் தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்த 4ஆயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்கதொலை பேசி ஆகியனவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று திருமணமான ஆண்களே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திருக்கோவில் பிரதேசத்தில் ஜனவரி மாதம் முதல் இதுவரை நான்கு பாலியல் துஷ்ப்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்படு வருவதாகவும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறும் திருக்கோவில் பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.