கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 3 பேருடன் வானிலே வைத்து சிதறிய சிறிய ரக விமானம்!

கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிறிய ரக விமானமொன்று விழுந்து விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளார்.

நான்கு பேர் பயணிக்கக்கூடிய விமானத்தில் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விபத்து ஏற்பட்ட சமயத்தில் எத்தனை பேர் விமானத்தில் இருந்தனர் என்ற தகவல் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement