இலங்கையில் 2017 லிலே தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம் போட்ட ISIS – புலனாய்வு பிரிவினர் பகீர்

சிரியாவில் பயிற்சி பெற்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளே இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து சென்ற கும்பல் ஒன்றே இவ்வாறு ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர்.

இதன்போது இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு 2017ம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் 2017ஆம் ஆண்டு, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உடன்பாட்டுக்கு வந்துள்ளது.

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹொமட் சஹ்ரான் உட்பட குழுவினர் மற்றும் ஐஸ் குழுவிற்கு இடையில் பியகம மல்வானை பிரதேசத்தில் வைத்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த இணக்கபாட்டின் பின்னர் சஹ்ரான் ஹாசிம் மிகவும் இரகசியமாக மறைந்திருந்தார்.

மறைந்திருந்தவர், பாதுகாப்பு பிரிவுகளிடம் இருந்து தப்பிப்பதற்காக சர்வதேசம் ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு திட்டங்கள் கொண்ட புத்தகங்களை படித்து அதற்கமைய செயற்பட்டு தாக்குதல் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் மறைந்திருந்த காலப்பகுதியில் சஹ்ரான் தனது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தவில்லை என புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 21ம் திகதி கொழும்பு ஷங்கீரிலா ஹோட்டலில் சஹ்ரான் தற்கொலை தாக்குதல் நடத்தியிருந்தார். எனினும் வெடிகுண்டை ரிமோல்ட் கொன்ரோல் மூலம் வெடிக்க வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன