கனடாவின் ரொறன்ரோ பகுதியில் மில்லியன் கணக்கான போதை பொருட்கள் கைப்பற்றல்!

கனடாவின் ரொறன்ரோவில் சாதனை அளவாக, போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெருமளவான கொக்கெய்ன் வகை போதைப் பொருட்களை கடத்துவதாக நம்பப்பட்ட குழு ஒன்றின் மீதான விசாரணையை, சில மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்திருந்த பொலிஸார், அவர்களிடம் இருந்து மில்லியன் கணக்கான இலாபமீட்டும் அளவுக்கு போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

சந்தேக நபர்களுடன் தொடர்புடையதாக நம்பப்பட்ட வீடுகள், களஞ்சியங்கள், வாகனங்கள் என்று ரொறன்ரோ, வோன், கிச்சனர், ஸ்டோனி கிறீக் ஆகிய பகுதிகளில் 29 இடங்களில், கடந்த ஏப்ரல் 25-ஆம் நாள் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் போது, 3 மில்லியன் பெறுமதியுள்ள 29 கிலோ கொக்கெய்ன், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட, பத்து மில்லியன் பெறுமதியான 3,905 கஞ்சா செடிகள், போதைப் பொருள் உருவாக்க பயன்படும் மருந்துகள் சுமார் 700 கிலோ கிராம் உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இது வரை கால ரொறன்ரோ பொலிஸ் வரலாற்றில், இந்த அளவுக்கு அதிகளவு குறித்த இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட முதலாவது சம்பவம் இதுவென பொலிஸார் வர்ணித்துள்ளனர்.