சென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான் – இதோ ஆதார வீடியோ

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது குறித்து ஒரு சிலர் இது பொய் என்று கூறி வரும் நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டது உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்றது.

Advertisement

இதில் வெற்றியின் அருகே சென்ற சென்னை அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதனால் சென்னை வீரர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் இதை இப்போது வரை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஹர்பஜன்சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாட்சன் இரத்த காயங்களுடன் சென்னை அணியின் வெற்றிக்காக போராடியதாக கூறி, வாட்சனின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதைக் கண்ட சென்னை ரசிகர்கள், வாட்சனின் இந்த அர்பணிப்பைக் கண்டு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருவதுடன், அவர் விரைவில் குணம் பெற வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால் ஒரு புறமோ, அது வாட்சனில் இரத்தம் கிடையது, பேடின் நிழல் என்று குறிப்பிட்டு வந்தனர். அதை நிரூபிக்கும் விதமாக வாட்சன் விமானநிலையத்தில் நடக்க முடியாமல் கொஞ்சம் பொறுமையாக செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஹர்பஜன் சிங்கிற்கு தமிழில் டுவிட் போடும் சரவணன் என்பவரிடமும் இது குறித்து கேட்ட போது, அது உண்மை தான், அந்த காயத்தை எங்கு வெளியில் கூறினால் நம்மை விளையாடவிடாமல் அணியினர் நிறுத்திவிடுவார்களோ என்ற காரணத்தினாலே அவர் கூறவில்லை.

தொடர்ந்து காயத்துடன் விளையாடியதன் காரணமாகவே 6 தையல் போட வேண்டிய நிலைமை என்று கூறியுள்ளார்.