பல நோய்களை தீர்க்க நத்தைச்சூரி மூலிகையை எப்படி பயன்படுத்துவது?

அரிய தன்மைகள் கொண்ட மூலிகைகளில் இருந்து, மாபெரும் காயகற்ப தன்மைகள் கொண்ட மூலிகைகள் வரை, ஆயிரக்கணக்கான மூலிகைகள் நம்மைச்சுற்றி, இருந்து வருகின்றன. செடிகள், கொடிகள், வேர்கள், தண்டுகள் இலைகள், கனிகள் மற்றும் காய்களின் மூலம், மனிதர்களுக்கு நன்மைகள் செய்யும் மூலிகைகள், அடர்ந்த காடுகளில் மட்டும்தான் வளரும் என்பதில்லை, மக்கள் வசிக்கும் இடங்களிலும் அவை பரவலாக இருந்துதான் வருகிறது.

அவற்றின் மகத்துவம் உணர்ந்தவர்கள் மட்டும், அவற்றை முறைப்படி பயன்படுத்தி, தங்கள் உடல் நலம், தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் உடல் நலத்தை காத்து வருகின்றனர்.

மூலிகைகளில், காயகற்ப மூலிகைகள் என்பன உயர்வானவை, அவற்றின் பயன்பாடுகளும், வளருமிடங்களும் சித்தர்களால், சங்கேத மொழிகளில் இரகசியமாகவே, வைக்கப்பட்டிருக்கும். அப்படியே அந்த உயரிய தன்மைகள் உடைய மூலிகைகளின் இருப்பிடத்தை அறிய நேர்ந்தாலும், அவற்றைப் பறிப்பதற்கு என்று சில முறைகள் உள்ளன.

Advertisement

குறிப்பிட்ட நட்சத்திரங்கள் நிறைந்த நாளில், குறிப்பிட்ட கால நேரத்தில், அந்த மூலிகைகளுக்கென்று உள்ள மந்திரங்களை முறைப்படி உச்சரித்து, காப்பு கட்டுவது போன்ற சடங்குகள் செய்து,, மூலிகையின் வேர்களை முற்றிலும் எடுக்கும்படி, முறைப்படி பறித்தால் மட்டுமே, மூலிகைகளின் உயரிய தன்மைகள், அந்தச் செடிகளில் இருக்கும், அல்லாவிடில், அவை வெறும் செடிகளாகவே இருக்கும், அதனால் எதிர்பார்த்த பலன்கள் கிட்டாது என்பது, முன்னோர் நம்பிக்கை. இதுபோன்ற செயல்களை மூலிகை சாப நிவர்த்தி என்பார்கள்.

இதுபோன்ற மூலிகை பறிப்பு முறைகள், காயகற்ப மூலிகைகள் எனும் உயரிய மூலிகைகளுக்கு மட்டும்தான் என்பதில்லை, அனைத்து வகை மூலிகைகளைப் பறிப்பதற்கும், இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, எந்தவித கால நேரக் கணக்குகள் இல்லாமல், எந்த வித சடங்குகளும் இன்றி, நாம் மூலிகைகளை பறிக்க முடியுமா, அதுவும், அந்த மூலிகை உயரிய காயகற்ப மூலிகையாகவும் இருந்தாலும், எளிதில் பறிக்க முடியுமா? என்பது போன்றவை நமது கேள்விகள் என்றால், அதற்கு முன்னோர்களின் பதில், நிச்சயம் முடியும் என்பதுதான்.

ஆம்! அது போன்ற ஒரு உயரிய மூலிகை இருக்கிறது, அதுதான், நத்தைச்சூரி! சாப நிவர்த்தி செய்யத் தேவை இல்லாத, உயரிய மூலிகை, சொன்னதைச் செய்யும் நத்தைச்சூரி, என்பர், முன்னோர்கள் எல்லாம்.

காயகற்ப மூலிகை நத்தைச்சூரி!

அதிகமாக வயல் வெளிகளில், ஈரப்பாங்கான இடங்களில் மற்றும் வாய்க்கால் கரையோரங்களில் தானாக வளரும் அபூர்வ மூலிகைதான், நத்தைச்சூரி.

சிறிய இலைகள் மற்றும் பூக்களுடன் காணப்படும் நத்தைச்சூரியின் இலைகள், வேர்கள் மற்றும் விதைகள் அரிதான பலன்கள் தருபவை.

நத்தைச்சூரியின் விதைகளே, காயகற்ப மருந்தாகிறது. இந்த விதைகளை தூளாக்கி, அதை நீரிலோ அல்லது தேனிலோ கலந்து தினமும் பருகி வர, உடல் வலுவுடன் பல ஆண்டுகள் நலமுடன் வாழலாம் என்கிறார்கள்