வவுனியா மாவட்டம் வெறுமனே அகதி முகாம்களுக்காக உருவாக்கப்பட்ட மாவட்டமா?

வவுனியா மாவட்டம் வெறுமனே அகதி முகாம்களுக்காக உருவாக்கப்பட்ட மாவட்டமாக அனைவரும் கருதுவதாக வவுனியா நகரசபை மேயர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

வட. மாகாண அதிகாரிகள் வவுனியா நகரை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், அதனை கண்டிக்கும் வகையில் வவுனியா நகரசபை மேயர் இன்று (வியாழக்கிழமை) குப்பை அகற்றும் வாகனத்தில் அலுவலகத்திற்கு பயணித்துள்ளார். இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Advertisement

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வட. மாகாண அதிகாரிகளின் புறக்கணிப்பால் வவுனியா நகர சபைக்குட்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நகரசபையில் வாகன பற்றாக்குறை காணப்படுவதாக பலமுறை தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வவுனியா என்றால் வெறுமனே அகதி முகாம்களுக்காக உருவாக்கபட்ட மாவட்டமாகவே அனைவரும் நினைக்கிறார்கள். யாழ்பாணத்தில் இருப்பவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்களாகவும், வவுனியாவில் இருப்பவர்கள் தீண்டதகாதவர்களாகவுமே வடமாகாண அதிகாரிகள் பார்கிறார்கள்.

நகரசபையை மாநாகர சபையாக தரமுயர்த்தகூடிய நிலை இருந்தும் அது அவர்களாலேயே தடைபடுகின்றது” எனத் தெரிவித்தார்.