மாவனெல்லையில் இரு ஜும்மா பள்ளிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

மாவனெல்லையில் இரு ஜும்மா பள்ளிகள் மீது மர்ம நபர்களால் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவனெல்லையில் இரு ஜும்மா பள்ளிகள் மீது இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாக்குதல் நடாத்திவிட்டு சென்றுள்ளனர்.

மாவனெல்லை கனேதன்ன ஜும்மா பள்ளி மற்றும் வெலேகட ஜும்மா பள்ளி (உயன்வத்த) இன்று மாலை சிறு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.

Advertisement

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த நபர்கள் கற்களினால் தாக்குதல் நடத்தியதோடு, இந்த தாக்குதல்களால் பள்ளிவாயலின் கண்ணாடிகள் சேதமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் தாக்குதல் இடம்பெற்ற பள்ளிக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்