Home உள்ளூர் செய்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் மக்களின் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் மக்களின் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிப்பு!

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம்தோறும் மே மாதம் 18ஆம் திகதி தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது

அந்தவகையில் இம்முறை தமிழினப் படுகொலை 10 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் இடம்பெற இருக்கின்றது.

அந்த வகையிலே நினைவேந்தல் வளாகத்தை சூழ 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அதோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் நிகழ்வுக்காக மக்கள் குறித்த இடத்துக்கு வருகை தந்து கொண்டிருப்பதை அவதானிக்கவும் கூடியதாக இருக்கின்றது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.