காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி, அரசுப்பள்ளியில் தூக்கு போட்டு தற்கொலை!

ஐதராபாத் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி, அரசுப்பள்ளியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த கனகையா (21), தாரா (19) ஆகியோர் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் புதன்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

Advertisement

வியாழக்கிழமையன்று Lakudaram பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில், மின்விசிறியில் தூக்கிட்டபடியே இருவரும் சடலமாக தொங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.