உலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு!

உலக தேனீ தினத்தை முன்னிட்டு இலங்கையில் முதன் முறையாக இன்று(20) யாழில் கொண்டாடப்பட்டது.

இதன் நோக்கம் மகரந்த சோ்க்கையினால் பொருளாதாரத்தை ஊக்கிவித்தல் எனும் தொனிப்பொருளில் இது கொண்டாடப்பட்டது.

முதன் முதலில் யாழ்ப்பாணம் காரைநகா் கோவளம் பகுதியில் உள்ள ஞானியா் முருகன் கோயிலில் இடம்பெற்றது. கோவளம் பகுதி தேனீ கிராமம் என விவசாய திணைக்களத்தினால் பாிந்துரைக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவனும், அவருடன் சோ்ந்து ஞானியா் முருகன் கோயில் பூசகரும் இணைந்து முதன் முதலில் ஞானியா் பகுதியில் தேனீ வளா்ப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அவா்களுக்கான ஊக்கமும் உதவிகளையும் விவசாய திணைக்களம் வழங்கி இருந்து. இதனை தொடா்ந்து குறித்த கிராமத்தில் உள்ள அனைவரும் தேனீ வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இன்றைய தினம் சா்வதேச தேனீ தினம் கொண்டாடும் முகமாக வடமாகாணத்தில் உள்ள ஜந்து மாவட்டங்களின் விவசாய திணைக்கள உயர் அதிகாாிகள், மற்றும் தேனீ வளா்ப்பில் ஆா்வம் உள்ள பலா் கலந்து கொண்டிருந்தனா்.

இதன் போது தேனீ வளா்ப்பின் முக்கியத்துவம், பொருளாதாரத்தை எவ்வாறு முன்னேற்றலாம், ராணி தேனீ எவ்வாறு பிாிப்பது, தேனீ வளா்ப்பின் கால எல்லைகள் தொடா்பில் பலா் தமது சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டனர்.