காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்!

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயக் கூலித் தொழிலாளியான இவரது மனைவி லட்சுமி, கடந்த 17ம் திகதி இரவு பேருந்து நிலையத்திலிருந்து வீட்டக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர், லட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி உள்ளார்.

போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலையாளி, சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தாமோதரன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், லட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை அறிந்த அவரது கணவர் ஆறுமுகம் கண்டித்ததால், லட்சுமி தன்னுடன் பேசாமல் இருந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.