இரத்தினபுரி பகுதியில் விஷவாயு தாக்கி இளைஞன் ஒருவர் பலி!

இரத்தினபுரி – கரன்னகொட பகுதியில் ஒருவரை காப்பாற்றச் சென்ற நபர் ஒருவர் விஷ வாயு தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

கரன்னகொட பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மாணிக்கக்கல் அகழ்வதற்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் நபர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

இவரை காப்பாற்ற முயற்சித்த போதே குறித்த இளைஞர் விஷ வாயு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனுடன் குழிக்குள் தவறி விழுந்து படுகாயங்களுக்கு உள்ளான நபர் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.