ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுதலை?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைளை, சட்ட மா அதிபர் திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பிலேயே ஞானசரர் தேரர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால், அவரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையுமென, ஞானசாரரால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

மேலும், ஞானசரரின் விடுதலை தனக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அதற்கு எதிராக மீண்டும் தான் நீதிமன்றம் செல்வதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது