யாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்!

யாழ்.சாகவச்சேரி தனங்களப்பு பகுதியைச் சேர்ந்த சு.சுரேந்திரன் (வயது 45) என்பவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டிலிருந்த போது , திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு , அவதிப்பட்ட போது வீட்டிலிருந்தோர் அவரை மீட்டு சாகவச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் போது வைத்தியர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சாகவச்சேரி பொலிஸார் , அது தொடர்பில் சாகவச்சேரி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவானுக்கு அறிக்கையிட்டனர்.

அறிக்கையைப் பார்வையிட்ட பதில் நீதிவான் , திடீர் மரண விசாரணை அதிகாரி ஊடாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கையிட பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.