Home விளையாட்டு உலகக்கோப்பையில் காயமடைந்த இலங்கை வீரர்களின் நிலை என்ன?

உலகக்கோப்பையில் காயமடைந்த இலங்கை வீரர்களின் நிலை என்ன?

தென் ஆப்பரிக்காவிற்கு எதிரான பயிற்சிப்போட்டியில் காயமடைந்த இலங்கை வீரர்களின் நிலை குறித்து இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய உலககோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டியில் இலங்கை வீரர்கள் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் இசுரு உதான ஆகியோர் காயமடைந்தனர். இதனால், போட்டியின் பாதியில் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக காயமடந்த இருவரும் துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை. இதனால், இருவரின் நிலை குறித்து கேள்விகள் எழுந்திருந்தன.

இந்நிலையில், தென் ஆப்பிக்கா அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் கருத்து தெரிவித்த திமுத் கருணாரத்ன, காயமடைந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் இசுரு உதான நலமாக இருக்கின்றனர். இருவரும் அடுத்த பயிற்சிப் போட்டியில் விளையாடுவார்கள் என தெரிவித்துள்ளார்.