வங்கதேச வீரரின் விக்கெட்டை வீழ்த்திய பின்பு ஷிகார் தவானை கடித்து வைத்த குல்தீப்!

வங்கதேச அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில், குல்தீப்யாதவ் விக்கெட் எடுத்துவிட்டு ஷிகார் தவானை கடித்து வைத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடர் நாளை கோலகலமாக நடைபெறவுள்ளது. நாளை முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வங்கதேசம் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Advertisement

இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

அப்படி மகதுல்லாவின் விக்கெட்டை வீழ்த்திய போது அவரை சக வீரர்கள் பாராட்டிய போது, ஷிகார் தவானும் அவரை பாராடினார்.

அப்போது குல்தீப் திடீரென்று ஷிகார் தவானின் நெஞ்சில் கடித்தார். அதன் பின் இருவரும் விக்கெட் எடுத்ததைப் பற்றி பேசினர்.

தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.