கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!

கிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவனரால் இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 12 கிராம் 50 மில்லிகிராம் அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டடியவை சேர்ந் 44 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.