நீங்கள் செய்யும் இந்த சின்ன பாவங்களுக்கு கூட நரகத்தில் கொடுக்கப்படும் கொடூரமான தண்டனைகள்?

நீங்கள் செய்யும் இந்த சின்ன பாவங்களுக்கு கூட நரகத்தில் கொடுக்கப்படும் கொடூரமான தண்டனைகள் என்ன தெரியுமா இந்த பூமியில் நாளுக்கு நாள் மனிதர்கள் செய்யும் பாவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மரணம் பற்றியோ அதற்கு பிறகான தண்டனைகள் பற்றிய பயமோ இல்லாமல் பாவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. பாவம் செய்தால் நரகம் என்று தெரிந்தவர்களுக்கு அங்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றி தெரியவில்லை.

இந்து மதத்தில் மரணத்திற்கு பிறகான வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகம் உள்ளது. பாவம் செய்தவர்களுக்கு நரகத்தில் வழங்கப்படும் தண்டனைகள் பற்றிய புத்தகம்தான் கருட புராணம் ஆகும். உங்கள் பாவத்திற்கு நரகத்தில் வழங்கப்படும் தண்டனைகள் என்னவென்று தெரிந்தாலே இங்கு பாவங்கள் குறைந்துவிடும். இந்த பதிவில் நரகத்தில் வழங்கப்படும் தண்டனைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

தாமிஸ்ரம்
மற்றவர்களின் செல்வத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இதுவாகும். இவர்கள் எமதர்மனின் ஊழியர்களால் கயிறால் கட்டப்பட்டு இரத்தம் வழிந்து மயக்கம் ஏற்படும் வரை சாட்டையால் அடிக்கப்படுவார்கள். அதன்பின் குணமான பிறகு மீண்டும் இந்த தண்டனை தொடரும். அவர்களின் நன்றாக வாசம் முடியும் வரை இந்த தண்டனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Advertisement

அந்ததம்ஸ்த்ரம்

இந்த நரக தண்டனை தங்களின் கணவன் அல்லது மனைவியை தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையாகும். இந்த தண்டனையும் தாமிஸ்ரம் போன்றதுதான், ஆனால் இந்த தண்டனையில் அவர்களை பட்டினி போட்டு சாட்டையால் அடிப்பார்கள்

ரௌரவம்

மற்றவர்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து அனுபவிக்கும் பாவிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இதுவாகும். இந்த தண்டனை வழங்கப்படுவர்களை ருரு என்னும் கொடூரமான நாகத்தை கொண்டு தண்டிப்பார்கள். இந்த நாகம் அவர்களின் காலம் முடியும் வரை அவர்களை தொடர்ந்து துன்புறுத்தி கொண்டே இருக்கும்.மஹாரௌரவம்

இதுவும் ருருவை போன்ற நாகத்தால் கொடுக்கப்படும் தண்டனைதான் ஆனால் இது அதனைவிட மோசமான நாகமாக இருக்கும். மற்றவர்களின் சொத்துக்கள், மனைவி, காதலியை அபகரித்து கொள்பவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்படுகிறது.

கும்பிபாகம்

இது மிகவும் பிரபலமானது. மற்ற உயிர்களை தனது சுயலாபத்திற்காக சுரண்டுபவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை இது. பெரிய பாத்திரத்தில் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் பாவம் செய்தவர்களை போட்டு எடுப்பார்கள்.

காலசூத்ரம்

நரகம் மிகவும் வெப்பமான இடமாக இருக்கும். தனது கடமையை சரியாக செய்த முதியவர்களையும், பெற்றோர்களையும் மதிக்காமல் நடப்பவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்படும். இந்த தண்டனையில் அவர்கள் வெப்பம் இருக்கும் இடத்தில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

அஷிதபத்ரம்

தனது சொந்த கடமைகளையே ஒழுங்காக செய்யாதவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை இதுவாகும். அஷிதபத்ரம் என்பது கத்தியை போன்று கூர்மையுடைய ஒரு இலையாகும். இந்த தண்டனை பெற்றவர்கள் கசையடிகளில் இருந்து தப்பித்து ஓடும்போது அவர்கள் இந்த கூரான ஆயுதங்கள் கொண்டு தாக்கப்படுவார்கள். அவர்களின் காலம் முடியும்வரை இந்த தண்டனை தொடர்ந்து வழங்கப்படும்.

சுக்ரமுகம்

தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தவறான ஆட்சி செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இதுவாகும். இந்த தண்டனையில் அவர்கள் கடுமையான ஆயுதங்களால் அடித்து கூழாக்கப்படுவார்கள். அதன்பின் குணமான பிறகு மீண்டும் இவ்வாறு செய்யப்படும்.

தப்தமூர்த்தி

மற்றவர்களின் நகைகளையும், தங்கத்தையும் திருடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இதுவாகும். இதில் அவர்கள் நெருப்பில் இட்டு வாட்டப்படுவார்கள்.

சல்மாலி

இது தவறான உறவில் ஈடுபடும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாகும். இரும்பில் செய்யப்பட்ட ஆயுதம் நெருப்பில் வாட்டப்பட்டு அது அவர்களின் பின்புறத்தில் மீண்டும் மீண்டும் வைக்கப்படும். அதேசமயம் எமனின் ஊழியர்கள் அவர்களை சாட்டையால் அடித்துக்கொண்டும் இருப்பார்கள்.