ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில கை வைத்தியங்கள்!

ஒவ்வொருவருக்குமே ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை கை வைத்தியங்களின் மூலம் பாதுகாத்து வந்தனர். நாளடைவில் கை வைத்தியத்தின் பயன்பாடு குறைந்து, கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளின் மூலம் உடல்நலத்தைப் பாதுகாத்து வருகின்றனர்.

என்ன தான் கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளால் உடல்நல பிரச்சனைகளை சரிசெய்ய முயற்சித்தாலும், ஒரு கட்டத்தில் அவற்றால் கட்டாயம் பக்கவிளைவுகளை சந்திக்கக்கூடும். ஆனால் இயற்கை வழங்கிய பொருட்களால் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், அப்பிரச்சனை நீங்குவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

இன்றைய தலைமுறையினர் பலருக்கு பொதுவாக நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான கை வைத்தியங்கள் குறித்து தெரியாமல் இருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு நம் பாரம்பரிய கை வைத்தியங்களை தமிழ் போல்ட் ஸ்கை கீழே தெரியப்படுத்தியுள்ளது.

அதைப் படித்து அவற்றை தெரிந்து கொண்டு, அன்றாடம் சந்திக்கும் சில பொதுவான உடல்நல பிரச்சனைகளை அந்த கை வைத்தியங்களின் மூலம் தீர்வு காணுங்கள். சரி, இப்போது எந்த பிரச்சனைக்கு எம்மாதிரியான கை வைத்தியங்களை மேற்கொள்ள வேண்டும் என காண்போமா…!

வைத்தியம் #1
குறைவான இரத்த அழுத்த பிரச்சனையா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸைக் குடியுங்கள். இதனால் குறைவான இரத்த அழுத்த பிரச்சனை சரியாகி, இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

வைத்தியம் #2
அசிடிட்டி பிரச்சனை இருக்கிறதா? இதற்கான சிறப்பான இயற்கை வைத்தியம் உணவு உட்கொண்ட பின் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இது சிறந்த ஆன்டாசிட்டாக மட்டும் செயல்படாமல், உண்ட உணவில் உள்ள சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு, அல்சர் வருவது தடுக்கப்படும்.

வைத்தியம் #3
அசிடிட்டி பிரச்சனைக்கான மற்றொரு சிறப்பான கை வைத்தியம், உணவு உண்ட பின் ஒரு துண்டு கிராம்பை வாயில் போட்டு சிறிது நேரம் வைத்து, அதன் சாற்றினை விழுங்குங்கள்.

வைத்தியம் #4
வயிற்று பிரச்சனைகளால் கஷ்டப்படுபவர்கள், தினமும் காலையில் ஒரு துண்டு பூண்டு எடுத்து வாயில் போட்டு மென்று விழுங்கி, ஒரு டம்ளர் நீரைக் குடிக்க, வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் சரியாகும்.

வைத்தியம் #5
கோடை வெயிலால் ஏற்படும் கடுமையான தலைவலிக்கு தர்பூசணி ஜூஸ் ஓர் நல்ல நிவாரணியாக இருக்கும். அதுவும் கோடைக்காலத்தில் தினமும் ஒரு டம்ளர் தர்பூசணி ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.

வைத்தியம் #6
ஒற்றைத் தலைவலியால் கஷ்டப்படுபவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிட விடுபடலாம். அதுவும் சில நாட்கள் இம்மாதிரி சாப்பிட்டால், ஒற்றை தலைவலியில் இருந்து முற்றிலும் விடுபட வாய்ப்புள்ளது.

வைத்தியம் #7
6 பேரிச்சம்பழத்தை 1/2 லிட்டர் பாலில் போட்டு, குறைவான தீயில் 25 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, தினமும் மூன்று கப் குடித்து வர, வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்