வவுனியா தோட்ட காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்களை மீட்பு!

இன்றைய தினம் வவுனியா வேலங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். இதன்போது உரப்பொதிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்களை அவதானித்து அவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் உரப்பொதியை சோதனை செய்து பார்த்தபோது ஐந்து கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் விஷேட அதிரடிபடையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து மீட்கப்பட்ட குண்டுகளை அவர்கள் செயலிழக்க வைத்துள்ளனர்.