மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் – இழுத்து மூடப்பட்டுள்ள வீதிகள்

மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக டெக்னிகள் சந்தி முதல் ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த பகுதியில் இருந்து புறக்கோட்டை பகுதியை நோக்கி செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு தமது எதிர்பை வெளிப்படுத்தவே குறித்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.