Home வவுனியா செய்திகள் வவுனியா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை இலக்கு வைத்து புதிதாக முளைத்த புதுவித வியாபாரம்!

வவுனியா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை இலக்கு வைத்து புதிதாக முளைத்த புதுவித வியாபாரம்!

வவுனியா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை இலக்கு வைத்து அவர்களது உடைமைகளை பாதுகாப்பதற்காக பணம் அறவிடும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களிற்கு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலைக்கு நோயாளர்களோ அல்லது அவர்களை பார்வையிட வருபவர்களோ மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை உட்கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக வைத்தியசாலைக்கு வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழலை இலக்காக வைத்து வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் அவர்களை பார்வையிட வருபவர்களிடமும் தலைக்கவசங்களை பாதுகாப்பதற்காக பத்து ரூபாய் வீதம் அறவிடப்பட்டு வருகின்றது. இந்த புதிய வியாபார தந்திரத்தினை வைத்தியசாலையை சூழ உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் அதிர்ஸ்ட இலாப சீட்டு விற்பனை செய்பவர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.