யாழில் மாணவர்களை கௌரவித்த அத்துரலிய ரத்னதேரர்!

இந்து பெளத்த கலாசார பேரவையின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் டிலான் பெரேரா வடமாகண ஆளுநர், மறவன்புலவு சச்சிதானந்த உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

நிகழ்வில் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கான சான்றிதழ்களை அத்துரலியே ரத்தன தேரர் வழங்கிவைத்தார்.

.