பாகுபலி 2 வியாபாரத்தை மிஞ்சிய ராஜமௌலியின் அடுத்தப்படம்- எத்தனை கோடிக்கு விலைபோனது தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்தப்பட படைப்பில் படு பிஸியாக இருக்கிறார்.

RRR என்று இப்போது ரசிகர்களால் அழைக்கப்படும் இப்படத்தில் முன்னணி நடிகர்களான ராம் சரண்-ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள்.

இவர்களை தாண்டி இன்னும் பெரிய நடிகர்கள் எல்லாம் நடிக்கிறார்கள். படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் வெளிநாட்டில் இப்படம் பெரிய தொகைக்கு விலைபோனதாம்.

இப்படம் சீனா இல்லாமல் மற்ற இடங்களை சேர்த்து படம் ரூ. 70 கோடிக்கு விலைபோனதாம். பாகுபலி 2 படம் வெளிநாட்டில் மட்டும் ரூ.64 கோடிக்கு விலைபோனது குறிப்பிடத்தக்கது.