Home வவுனியா செய்திகள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் இன்றி பெரிதும் அவதி!

வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் இன்றி பெரிதும் அவதி!

வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் இன்றி பெரிதும் அவதியுறுவ தாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக நோயாளர்கள், வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களை பார்வையிட செல்லும் உறவினர்கள், கிளி னிக் செல்லும் நோயாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெரிதும் அவதியுறுவதாகவும் வைத்திய சாலைக்கு முன்பாக துவிச்சக்கரண்டிகள், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்கு படையினர் அனுமதி யளிக்கவில்லை. இதனால் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வதால் அவ்வீதிக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு தரிப்பிடம் ஒன்றினை அமைத்து தருமாறும் கோரியுள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலைக்கு தினமும் பல பிரதேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான நோயாளர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் தமது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தரிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடு க்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் , தலைக்கவசங்கள் திருடப்படுவதும் தினமும் இடம்பெற்று வருகின்றது. வைத்தியசாலையில் பணியாற்றுபவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளபோதிலும் வைத்திய சாலைக்குச் செல்லும் நோயாளர்கள், பொதுமக்கள் நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்கள் தமது வாகனங்களை வெளியே நிறுத்திவிட்டுச் செல்வதற்கு வெளியே சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படை யினர் அனுமதிக்கவில்லை.

இதனால் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதி ஒன்றில் தமது மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டிகளை நிறுத்திவிட்டுச் செல்வதால் அவ்வீதிக்கு தடை ஏற்பட்டுள்ளது அவ்வீதியிலுள்ள பொதுமக்கள், முச்சக்கரவண்டி சங்கத்துக்கு செல்பவர்கள் போன்ற பலர் பெரிதும் அவல நிலைக்குச் சென்றுள்ளதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் வாகனப்பாதுகாப்பு நிலையம் ஒன் றினை அமைத்துக்கொடுக்குமாறும் வைத்தியசாலைக்கு செல்பவர்கள் தெரிவித்துள்ளனர்.