ரத்ன தேரருக்கு எதிராக புலனாய்வுப் பிரிவினர் முறைப்பாடு!

சஹாப்டீன் சாபி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரத்ன தேரர் ஊடகங்களின் எதிரில் கண்காட்சியை நடத்தி, விசாரைண செய்யும் அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகளிலும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதோடு அவர்களை அச்சுறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரியில் விஞ்ஞான அடிப்படையில் குருணால் பிரச்சினையை அணுகக் கூடாது எனவும், இதனை சமூக விஞ்ஞான அடிப்படையில் அணுக வேண்டுமெனவும் தேரர் கோரி வருகின்றார்.

Advertisement

அத்துடன் வழக்கு விசாரணைகளின் பின்னர் உயர் பொலிஸ் அதிகாரியான திசேராவை ஊடகங்களின் முன்னிலையில் ரத்ன தேரர் கடும் தொனியில் எச்சரித்திருந்தார்.

எதிர்வரும் தேர்தலலில் போட்டியிட அல்லது தேசியப் பட்டியலில் இணைந்து கொள்ளவே இவ்வாறு ரத்ன தேரர் ஊடகங்களின் முன்னிலையில் நடந்துகொள்ள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ரத்ன தேரரின் செயற்பாடுகள் குறித்து நீதிமன்றிற்கு அறிவிப்பதற்கு புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.