யாழில்,14வயது சிறுமியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட 55 வயது முதியவர் கைது!

14வயது சிறுமியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட 55 வயது முதியவர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. கைதான முதியவர், சிறுமியின் மாமா முறையானவர்.

சிறுமியை சில தடவைகள் பாலியல்ரீதியான அங்க சேட்டைக்கு உள்ளாக்கிய வந்துள்ளார் சந்தேகநபர்.

Advertisement

இந்த விடயத்தை வெளியில் சொன்னால், சிறுமியின் தந்தையை கொன்று விடுவேன் என மிரட்டியே இந்த பாதகத்தில் ஈடுபட்டுள்ளார்.

எனினும், கொடுமை பொறுக்க முடியாத சிறுமி, சிலநாட்களில் விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, சிறுமி நேற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்குமூலம் வழங்கினார்.

நேற்று பிற்பகல் சந்தேகநபர் கைதானார். சிறுமி வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கைதானவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்