Home சமூக சீர்கேடு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 19 பெண்கள் உட்பட 21 பேர் கைது

விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 19 பெண்கள் உட்பட 21 பேர் கைது

கல்கிஸ்சையில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 19 பெண்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. இதன்போது ஆயுர்வேத வைத்தியர், பெண் முகாமையாளர் மற்றும் ஆண் முகாமையாளர் ஒருவரும் விபச்சார தொழில் ஈடுபட்ட 18 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ச நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை, வாத்துவ, கண்டி, ருவன்வெல்ல, தேமோதரை, ஹட்டன், தெல்தோட்டை, கொட்டாவ ஆகிய பிரதேசத்தை சேர்ந்த 20 – 50 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.