கனடாவில் பாரிய நிலநடுக்கம்!

கனடாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியம் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹைடா மாகாணத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

நிலநடுக்கம் ஏற்பட்டத்தை ஹைடா மாகாணத்திலுள்ள மக்கள் உணர்ந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.