சுவிட்சர்லாந்தில் 40 ராணுவ வீரர்களை தாக்கிய கண்ணுக்கு தெரியாத எதிரிகள்!

சுவிட்சர்லாந்து ராணுவ வீரர்களில் நாற்பதுக்கும் மேலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், அவர்களை தாக்கியது எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் அல்ல, கண்ணுக்குத்தெரியாத நோய்க்கிருமிகள்!

ஆம், மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள ராணுவ பயிற்சி முகாம் ஒன்றிலுள்ள ராணுவ வீரர்களில் 40 பேருக்கும் மேலானோருக்கு திடீரென உடல் நலம் பாதிகப்பட்டதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

Advertisement

Lindenஇலுள்ள Jassbach பயிற்சி முகாமிலுள்ள 43 ராணுவ வீரர்களுக்கு திடீரென கடுமையான வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டது.

அதனால் அவர்கள் 43 பேரும் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

அவர்களில் நான்கு பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதனால் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

நோய் பரவாமல் இருப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, Jassbach முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது முகாமுக்குள்ளும், முகாமிலிருந்து வெளியேயும் யாரும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது.