Home யாழ் செய்தி யாழில்,ஈரு­ரு­ளி­யில் சென்ற முதி­ய­வர் (வயது – 74) மயங்கி வீழந்­த­தில் விலா எலும்பு உடைந்­தது உயி­ரி­ழப்பு!

யாழில்,ஈரு­ரு­ளி­யில் சென்ற முதி­ய­வர் (வயது – 74) மயங்கி வீழந்­த­தில் விலா எலும்பு உடைந்­தது உயி­ரி­ழப்பு!

வெயில் வேளை­யில் ஈரு­ரு­ளி­யில் சென்ற முதி­ய­வர் (வயது – 74) மயங்கி வீழந்­த­தில் விலா எலும்பு உடைந்­தது உயி­ரி­ழந்­தார்.

சங்­க­ரன் இராமு என்ற முதி­ய­வரே அவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ரா­வார்.

மட்­டு­வி­லில் இடம்­பெற்ற உற­வி­ன­ரின் சாவு வீட்­டில் கலந்து விட்டு மதிய வேளை­யில் மற­வ­ன­பு­ல­வில் உள்ள வீட்­டுக்கு ஈரு­ரு­ளி­யில் சென்­றுள்­ளார்.

அவ்­வே­ளை­யில் மயங்கி வீழ்த்­துள்­ளார்.

சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்ட போதி­லும் சிகிச்சை பய­னின்றி அவர் உயி­ரி­ழந்­தார்.

யாழ்ப்பாணம் வட­ம­ராட்சி, பருத்­தித்­துறை உப­ய­க­திர்­கா­மம் பெருந்­தெரு பகு­தி­யில் உள்ள வீடு ஒன்­றில் நேற்று அதி­காலை இரண்டு மணி­ய­ள­வில் கொள்­ளைச்­சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

அதி­காலை வேளை­யில் வீட்­டின் முன்­க­தவை உடைத்­துக்­கொண்டு சென்ற மூன்­று­ பேர் கொண்ட கும்­பல் அங்­கி­ருந்­த­வர்­களை கொட்­டன்­க­ளால் தாக்­கி­விட்டு வீட்­டி­னுள் நீண்­ட­நே­ரம் தேடு­தல் நடத்தி வீட்­டில் இருந்த நான்கு பவுண் தங்க நகை­களை கொள்­ளை­ய­டித்து சென்­றது என்று பொலிஸ் முறைப்­பாட்­டில் பதி­வு­ செய்­யப்­பட்­டுள்­ளது.

தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த கர்ப்­பி­ணிப் பெண் மந்­திகை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­து­டன் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் சமீ­ப­கா­ல­மாக அதி­க­ரித்­து­வ­ரும் கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளால் அந்­தப் பகுதி மக்­கள் அச்­சத்­தில் உள்­ள­னர்.