யாழ் மாநகரசபை வேலை மேற்பார்வையாளர் மாநகரசுகாதார தொழிலாளியால் தாக்கப்பட்டு படுகாயம்!

யாழ் மாநகரசபையில் சந்தை மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் சேவியர் என்பவர் யாழ் மாநகரசபையில் சுகாதாரத் தொழிலாளியாகக் கடமையாற்றும் சுகாதாரத் தொழிற்சங்க தலைவரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

நேற்று நடந்த இச் சம்பவத்தில் காயமடைந்த மேற்பார்வையாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இதே வேளை குறித்த தொழிலாளியை வேலையிலிருந்து தற்காலிக இடைநிறுத்தம் செய்துள்ளதாக யாழ் மாநகரசபை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த மேற்பார்வையாளர் எதற்காக தாக்கப்பட்டர் என்பது குறித்து தெரியவரவில்லை. இருப்பினும் மேற்பார்வையாளர் தொழிலாளியை ஏசியதாகக் தெரிவித்தே தொழிலாளி கடுமையாகத் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை குறித்த தொழிலாளி வேலையிலிருந்து தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டதற்காக நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக சுகாதாரத் தொழிலாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்

Advertisement