Home விளையாட்டு அனைவரும் பதவி விலகுங்கள்! இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அமைச்சர் திடீர் உத்தரவு

அனைவரும் பதவி விலகுங்கள்! இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அமைச்சர் திடீர் உத்தரவு

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற உள்ள ஒருநாள் போட்டி தொடரில் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் அனைவரையும் பதவியிலிருந்து விலகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றின் மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன் பின்னர் அவர்களின் ஒப்பந்தம் தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக மேலும் பல தீர்மானங்களை எடுக்க இருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்